லெய்டனில் ஒரு நாள் – 2
லெய்டன் காற்றாலையை விட்டு நகரும்போது, அருகிலிருந்த சிங்கெல் பார்க்கில் ஒரு பெண் சிலை என் கவனத்தை ஈர்த்தது. அது 1945ஆம் ஆண்டு நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்து நெதர்லாந்து விடுதலை பெற்றதை நினைவுகூர எழுப்பப்பட்டது. உலகப் போர்கள் ஐரோப்பாவின் ஒவ்வொரு நகரத்தையும் ஏதோ ஒரு வகையில் பாதித்திருந்தன. அந்த வலிகளையும் மீண்டெழுந்த நம்பிக்கையையும் நினைவுகூரும் சின்னங்கள் இங்கு ஏராளம். அமைதியையும் புதிய தொடக்கத்தையும் குறிக்கும் வகையில் அந்த பெண் சிலை கையில் ஒரு மலர்ந்த கிளையை ஏந்தியிருக்கிறாள். ஒரு […]