லெய்டனில் ஒரு நாள் – 1
நெதர்லாந்தின் அடையாளங்களில் ஒன்று, பாரம்பரியக் காற்றாலைகள். அதைப் பார்ப்பதற்கும் படம் பிடிப்பதற்கும் வந்துகொண்டே இருப்பார்கள். ஆனால் அது டச்சுக்காரர்களின் கண்டுபிடிப்பு இல்லை. பெர்சியாவிலிருந்து வந்த தொழில்நுட்பம். கி.பி. 9ஆம் நூற்றாண்டிலேயே கிழக்கு ஈரானின் சிஸ்தான் மற்றும் கோராசான் பகுதிகளில் அதன் ஆரம்ப வடிவமான செங்குத்துவடிவக் காற்றாலைகள்(vertical-axis windmills) இருந்தன. அஸ்பாத்(Asbad) எனப்படும் இக்காற்றாலைகள் யுனெஸ்கோவின் உலக பாரம்பரியச் சின்னங்களுக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இப்போது அவை செயல்பாட்டில் இல்லை. தொல்லியல் மரபுச் சின்னங்களாக பாதுகாக்கப்படுகின்றன. நெதர்லாந்து காற்றாலைகள் […]