All Posts

All Posts, Journal of Raw Thoughts

I walked away to find myself again

Sometimes, walking away from someone doesn’t mean you stopped caring. Sometimes, it means you finally realized you were losing yourself while trying to carry someone else’s pain. I had a friend during college. We were always together. People used to ask me where she was when I was alone and ask about me when she […]

All Posts, பயணங்கள்

லெய்டனில் ஒரு நாள் – 3

லெய்டன் ஒரு திட்டமிடப்பட்ட நகரம் என்று குறிப்பிட்டிருந்தேன். எட்டு நுழைவாயில்களும் நகரத்தைச் சுற்றியிருந்த சிங்கெல் கால்வாய் வளையமும் பெரும் பாதுகாப்பு அரணாக விளங்கியது. ஒவ்வொரு நுழைவாயிலும் ஒரு தூக்குப் பாலம் அல்லது திறக்கும் பாலம் மூலம் இணைக்கப்பட்டிருந்தன. கால்வாய்களில் கப்பல்களும் படகுகளும் தடையின்றிச் செல்வதற்காக அவை தேவையான நேரங்களில் உயர்த்தப்பட்டு இயக்கப்பட்டன. அவற்றை இன்றும் பராமரித்து வருவது எனக்கு சுவாரசியமாக இருந்தது. எட்டு நுழைவாயில்களில் இன்று எஞ்சியிருப்பது கிழக்கு மற்றும் மேற்கு நுழைவாயில்கள் மட்டுமே. மறைந்துபோன மற்ற

All Posts, பயணங்கள்

லெய்டனில் ஒரு நாள் – 2

லெய்டன் காற்றாலையை விட்டு நகரும்போது, அருகிலிருந்த சிங்கெல் பார்க்கில் ஒரு பெண் சிலை என் கவனத்தை ஈர்த்தது. அது 1945ஆம் ஆண்டு நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்து நெதர்லாந்து விடுதலை பெற்றதை நினைவுகூர எழுப்பப்பட்டது. உலகப் போர்கள் ஐரோப்பாவின் ஒவ்வொரு நகரத்தையும் ஏதோ ஒரு வகையில் பாதித்திருந்தன. அந்த வலிகளையும் மீண்டெழுந்த நம்பிக்கையையும் நினைவுகூரும் சின்னங்கள் இங்கு ஏராளம். அமைதியையும் புதிய தொடக்கத்தையும் குறிக்கும் வகையில் அந்த பெண் சிலை கையில் ஒரு மலர்ந்த கிளையை ஏந்தியிருக்கிறாள். ஒரு

All Posts, பயணங்கள்

லெய்டனில் ஒரு நாள் – 1

நெதர்லாந்தின் அடையாளங்களில் ஒன்று, பாரம்பரியக் காற்றாலைகள். அதைப் பார்ப்பதற்கும் படம் பிடிப்பதற்கும் வந்துகொண்டே இருப்பார்கள். ஆனால் அது டச்சுக்காரர்களின் கண்டுபிடிப்பு இல்லை. பெர்சியாவிலிருந்து வந்த தொழில்நுட்பம். கி.பி. 9ஆம் நூற்றாண்டிலேயே கிழக்கு ஈரானின் சிஸ்தான் மற்றும் கோராசான் பகுதிகளில் அதன் ஆரம்ப வடிவமான செங்குத்துவடிவக் காற்றாலைகள்(vertical-axis windmills) இருந்தன. அஸ்பாத்(Asbad) எனப்படும் இக்காற்றாலைகள் யுனெஸ்கோவின் உலக பாரம்பரியச் சின்னங்களுக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இப்போது அவை செயல்பாட்டில் இல்லை. தொல்லியல் மரபுச் சின்னங்களாக பாதுகாக்கப்படுகின்றன. நெதர்லாந்து காற்றாலைகள்

All Posts, கதைகள்

சங்கமம்

வீட்டிற்கு ஒரே மகள் என்பதால் செல்லம் என்று சொல்லிவிட முடியாது. விடுமுறை நாட்களில் மூவரும் சேர்ந்தே சாப்பிடும் வழக்கம். ஒருநாள் மதியம் சோறு, குழம்பு, பொரியல் , தட்டுகள் எல்லாம் பட்டாசாலைக்குப் போனது. நான் உருண்டைச்செம்பில் தண்ணீர் எடுத்துவரும் வழியில் கைநழுவியது. சத்தம் கேட்டு அப்பா வந்தார். ஒரு பொருளை ஒழுங்கா எடுத்துட்டு வரத்தெரியுதா? எதையெடுத்தாலும் கீழே போடு. நீயெல்லாம் எதுக்குத்தான் லாயக்கு? வசவு விழும்போதே அடுப்படிக்குள்ளிருந்து டங்..கென்று சத்தம். உள்ளேபோய் பார்த்தால் தண்ணீரை தாரைவார்த்துக் கொண்டு

Scroll to Top