All Posts

All Posts, சிந்தனைத்துளிகள்

முத்துக் குளித்தல்

நான் பார்க்கின்ற உலகத்தை நீங்கள் பார்க்கவில்லை என்றால் நமக்கு வெளியே இருக்கின்ற உலகம் நிஜமானதா அல்லது நமக்கு உள்ளே இருக்கின்ற உலகம் நிஜமானதா? சூரியன் இன்று மறைக்கப்பட்டிருந்தது. மேகமூட்டங்கள் வென்றுவிட்டதாக தோற்றம் அளிக்கும் ஒரு காலை. சூரியன் ஒளிர்ந்துகொண்டிருக்கும் நிஜத்தை அந்த முழுமையை நான் அறிகிறேன். இந்த உடம்பு அறிந்திருக்கமுடியாது என்பதால்தான் விட்டமின் டியை மருந்தாக உட்கொள்கிறோம். அப்படியென்றால் மனிதஉடல் என்பதே முழுமையை அறிந்துகொள்ளத் தடையாய் இருக்கிறதா? அத்தடையை பொருட்படுத்தாதவர்கள் ஒருவேளை முழுமையைக் கண்டடைந்திருக்கலாம். மனித உடலின் […]

All Posts, கதைகள்

பொற்குவியல்கள்

பள்ளிவளாகம் முழுவதும் இலைச்சருகுகள் சிறு பொற்குவியல்களாக குவிக்கப்பட்டிருந்தன. நுழைவாயிலின் இடப்பக்கம் கரும்பலகையில் என் பெயரைப் பார்த்தபடி நின்றிருந்தேன். “டேய், வாழ்த்துக்கள்டா..!” பின்னாலிருந்து ஒரு குரல் கேட்டது. துள்ளலோடு திரும்பினேன். சுருள் முடி மண்டை. சவரம் செய்யப்பட்ட முகம். அளவான மீசை. கழுத்தை நெரிக்கும் காலர் பட்டனிலிருந்து சட்டைக்கை பட்டன்வரை எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்கு. தமிழும் சரி, தமிழய்யாவும் சரி, எதிலும் சமரசம் செய்து கொண்டதில்லை. “ஐயா, தமிழ்ல பார்த்தீங்களா? 196 மார்க்கு வாங்கியிருக்கேன். பி.ஏ. தமிழ் படிக்கப்போறேன்,

All Posts, கதைகள்

விடைபெறுதல்

ஆறுமணிக்கு என்னைப் பார்த்துவிட்டுப் போயிருந்தார் அப்பா. மீண்டும் வந்திருப்பதாக அறிவிப்பு கேட்டது. விடுதி அறையிலிருந்து பதறியடித்துக் கொண்டு ஓடினேன். இரண்டு விடுதி வளாகங்களைக்கடந்து பிள்ளையார் கோவிலையொட்டி விடுதியின் முகப்பு. வழியெல்லாம் மங்கலாகத்தான் தெரிந்தது. அப்பா மட்டும் தெளிவாகத் தெரிந்தார். கருப்பண்ணசாமி சிலையாட்டம். ஓடிப்போய் அப்பாவைக் கட்டிக்கொண்டேன். அழுகையும் படபடப்பும் அடங்க பத்து நிமிடங்களாவது ஆனது. என்னை அணைத்திருந்தபடியே வாட்ச்மேனிடம் அப்பா சொன்னார், “எனக்கு ஹார்ட் அட்டாக் இருக்கு. அதான் ரெண்டாவது முறை கூப்பிட்டதும் புள்ள பயந்துருச்சு…” என்னிடம்

Good Reads

பத்து லட்சம் காலடிகள்

ஒவ்வொரு கதையும் ஒன்றுக்கு ஒன்று சளைத்தது இல்லை என்பதுபோல் அமைந்த ஜெயமோகனின் சிறுகதைத் தொகுப்பு இது. ஔசேபச்சன் சொல்லுகிற கதைகளில் வரும் கதாநாயகன் ஆண், பெண், மனிதன், விலங்கு, அரசன், அமைச்சர், போலீஸ், திருடன் என எவரும் இல்லை. ‘போலீஸ்-குற்றவாளி’ என்ற ஆட்டம், துப்பறிதல் அனுபவம், விசாரணைக் கட்டங்கள் என கதைக்குள் இழுக்கப்பட்டாலும், அதைவிட வேறொன்றை இக்கதைகள் கொண்டிருக்கின்றன; ஒரு மையவெளி. ஒவ்வொரு கதையும் ஒரு சிறு திறப்பின் வழியாக நுழைந்து, விரிந்து விரிந்து சென்று ஒரு

Scroll to Top